குளித்தலை பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜன நாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

img 20240330 wa00433206992000300022944 - குளித்தலை பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜன நாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி யில் பா.ஜனதா கூட்டணி சார்பில் இந் திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தர் போட்டியிடுகிறார். இவர் நேற்று குளித்தலை சட்டமன்ற தொகு திக்குட்பட்ட ஆர்.டி.மலை உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் திறந்தவேனில் நின்றவாறு பேசி யதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு தாமரை சின்னத்தில் வாக்க ளித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தால் பெரம்பலூர் நாடாளு மன்ற தொகுதியில் 1,500 ஏழை, எளிய குடும்பங்கள் ரூ.10 லட்சம் வரை இலவச உயர்சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல் பெரம்ப லூர் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுக ளுக்கு மேலாக நிறைவேற்றப்படாத ரெயில்வே திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன். என்னை மீண்டும் எம்.பி ஆக்கினால் நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து தோகை மலை பகுதிக்கு தனிக்கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தருவேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிக்க  பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி
img 20240330 wa00424997514627082323845 - குளித்தலை பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜன நாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயசீலன், முதன்மை அமைப்பு செயலாளர் எஸ்.எஸ். வெங்கடேசன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, மாவட்ட செயலாளர் விநா யகா பிச்சை, பா.ஜனதா மாநில மக ளிர் அணி தலைவி மீனா வினோத்கு மார், தமிழ் தேச கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் அருள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக் கள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

img 20240330 wa00446049810649803689424 - குளித்தலை பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜன நாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மலைக்கோட்டை கோவிலில் விநாயகரை வணங்கி பிரச்சாரத்தை துவக்கினார் நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா.

Sat Mar 30 , 2024
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 சட்டமன்ற தொகுதிகளில், முதல் கட்டமாக வருகிற 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வெற்றி வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகின்றார். கடந்த சில நாட்களாக திருச்சி, புதுக்கோட்டை மாநகரில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று, திருச்சி மாநகர் […]
IMG 20240330 WA0054 - திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மலைக்கோட்டை கோவிலில் விநாயகரை வணங்கி பிரச்சாரத்தை துவக்கினார் நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா.

You May Like