மீண்டும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம்…

பெண் காவலரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கருக்கு மதுரை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரவு நகலை வழங்கினர்.

சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக கடந்த மே 4 ஆம் தேதி தேனியில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், குண்டர் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்ததன் பேரில், ஆகஸ்ட் 9ஆம் தேதி நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்தது.

எனினும், தற்போது சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் மூத்த தலைவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

Tue Aug 13 , 2024
சுதந்திர தினம் மற்றும் தொடர்ந்து வரும் விடுமுறையை முன்னிட்டு, 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. அதன் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சுதந்திர தினம் மற்றும் அடுத்தடுத்த நாட்களில் உள்ள விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து மற்றும் பிற பகுதிகளிலிருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையின் கிளாம்பாக்கம் மையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, […]
837849 governmentbus - சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

You May Like