
மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களின் உத்தரவின்பேரில், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா இன்று (24.02.2025, திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முத்தியால்பேட்டை, காந்தி வீதி, திருக்குறள் மணிக்கூண்டு அருகில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மாவின் உருவப்படத்திற்கு மாநில கழக துணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வையாபுரி மணிகண்டன் அவர்கள் தலைமையில் கழக முன்னோடிகள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவின் ஒரு பகுதியாக, திரு. வையாபுரி மணிகண்டன் அவர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில கழக துணைச் செயலாளர் காசிநாதன், தொகுதி கழக செயலாளர் பழனிசாமி, கழக இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், முன்னாள் தொகுதி செயலாளர் மணி, தொகுதி தலைவர் கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மோகன், மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் உதயசூரியன், மாநில வர்த்தக அணித் தலைவர் செல்வம், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் விஸ்வநாதன், மாநில சிறுபான்மையினர் துணைத் தலைவர் அந்துவான், மாநில அண்ணா தொழிற்சங்க துணைச் தலைவர் கண்ணன், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஹரிகிருஷ்ணா, மாநில எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணித் துணைத் தலைவர் பிரபாகரன், மாநில வர்த்தக அணித் துணைச் செயலாளர் சிவா, தொகுதி கழக துணைச் செயலாளர் ராதா ஆகியோர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.