2-வது நாளாக அதிமுகவினர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்கின்றனர்.இன்று நடக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத்திலும் அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து வந்ததுடன், இன்றும் வெளிநடப்பு செய்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். எடப்பாடி கே. பழனிசாமி பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ”சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, முதலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க வேண்டும். மேலும், எம்எல்ஏ ஒருவர் இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆகையால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ குழு தான் விசாரிக்க வேண்டும். சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்னையை பேசுவதற்காக தான். நேற்று நான் ஹோமிசோபில் மருந்து பற்றாக்குறையாக இருக்கிறது எனக் கூறினேன். ஆனால், திமுக அமைச்சர் ஓமிபிரசோல் மருந்து பற்றி பேசுகிறார்” என்று கூறியுள்ளார்.
You May Like
-
1 month ago
மாநில செயலாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!
-
3 months ago
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!
-
3 months ago
விஜய் முகத்துடன் தவெக கொடி அறிமுகம்
-
6 months ago
மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் மூத்த தலைவர்கள்
-
7 months ago
இந்தியாவை ஊழலில் இருந்து விடுவித்தார்…..
-
6 months ago
தலைவர்கள் மீது வழக்குத் தொடருவேன்:மாலிவால்