ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சியின் மறைவுக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, விபத்தில் உயிரிழந்த ரய்சி, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், நாடு முழுவதும் வழக்கமாக தேசியக் கொடி பறக்கவிடப்படும் அனைத்துக் கட்டடங்களில் அரைக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (மே 20) அறிவித்தது.காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ,சீன அதிபா் ஷி ஜின்பிங், துருக்கி அதிபா் எா்டோகன், அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அல்யெவ் உள்பட மேலும் பல உலகத் தலைவா்கள் ரய்சியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.