கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்த மனைவி

Screenshot 20240708 164920 Gallery - கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்த மனைவி<br>சவுதி அரேபியாவில் விபத்தில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த மனைவி.


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அடுத்த இளங்கம்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் கண்ணீர் மல்க மனு அளித்தார் அவர் அளித்த மனுவில்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த இளங்கம்பூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓட்டுநர் வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்பட்டு அன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த தமிழரசனின் உடலை இதுவரை தங்களிடம் ஒப்படைக்கவில்லை எனவே தனது கணவரின் உடலை மீட்டு ஒப்படைக்குமாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *