மே 25 ஆம் தேதி ஆறாம் கட்ட தேர்தல்

மக்களவைத் தேர்தல்:ஆறாம் கட்டத் தோ்தலில் 889 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். கடந்த ஏப். 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்று வருகிறது. ஐந்தாம் கட்டத் தோ்தல் இன்று (மே 20) நடைபெற்று வருகிறது.
ஆறாம் கட்டத் தோ்தல் 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 58 தொகுதிகளுக்கு மே 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6-ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 1978 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தின் 14 தொகுதிகளுக்கு 470 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வேட்புமனுக்கள் பரிசீலனை, திரும்பப் பெறுவதற்கான கடைசித் தேதி நிறைவடைந்த நிலையில் 58 தொகுதிகளில் மொத்தம் 889 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இதையும் படிக்க  4ஆம் கட்ட மக்களவை தேர்தல்;67% வாக்குப் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலி பல்கலைக்கழக பட்டியல்!

Mon May 20 , 2024
பல்கலைக்கழக மானியக்குழு, அங்கீகாரத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை UGC இணையதளத்தில் வெளியிட்டது. நாடு முழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று UGC  அறிவித்துள்ளது.இந்த பட்டியலில், தில்லியில் 8, உத்தரப்பிரதேசத்தில் 4, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளத்தில் தலா 2-ம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தலா 1  உட்பட மொத்தம் 21 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள எந்த பல்கலைக்கழகமும் இந்தப் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்வையாகும்.பிற […]
ugc - போலி பல்கலைக்கழக பட்டியல்!

You May Like