குவைத்தில் ஏற்பட்ட பயங்கமான தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 45 இந்தியா்கள், 3 பிலிப்பின்ஸ் நாட்டை சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று(ஜுன் 13) தெரிவித்தனர்.இதையடுத்து,தீ விபத்தில் சிக்கி உயிழிந்த 45 இந்தியர்களின் உடல்கள் இன்று (ஜுன் 14 ) கேரளாவில் தரையிறங்கின. உடல்களை மீண்டும் கொண்டு வர இந்திய விமானப்படை விமானம் அனுப்பப்பட்டது. “பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அதிக நேரம் ஆக வேண்டாம். அனைத்தும் குறைந்த நேரத்தில் முடிக்கப்படும்” என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.