Thursday, October 30

இத்தாலி சென்றடைந்தார் மோடி!

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடிக்கு இத்தாலி அரசு வரவேற்பு அளித்தது.இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் அமா்வில் பங்கேற்க, பிரதமர் மோடி சென்றுள்ளார்.இந்த பயணம் குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலியில் தரையிறங்கிவிட்டேன். உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபட ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒன்றாக, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதையும், பிரகாசமான எதிர்காலத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதைதே நோக்கம்.” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் இதில் பங்கேற்கயுள்ளன. ஜி7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் வியாழக்கிழமை (ஜூன் 13) தொடங்கி சனிக்கிழமை (ஜூன் 15) வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறும் மாநாட்டு அமா்வில் பிரதமா் மோடி பங்கேற்கிறார்.

இதையும் படிக்க  தொழில்நுட்ப துறையில் பணி நீக்கம்: 80,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழப்பு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *