ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்களும் காவல்துறையினரும் பள்ளிகளுக்கு விரைந்து சென்று அனைவரையும் வெளியேற்றினர். பள்ளி முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.மறுபக்கம், மின்னஞ்சல் முகவரி யாருடையது, எங்கிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன என்பது குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள் என பொதுவிடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.