Thursday, October 30

மாஸ்கோவில் துப்பாக்கி சூடு – 60 பேர் பலி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர்.

குரோகஸ் சிட்டி ஹாலில் பிக்னிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மக்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். வெடிகுண்டுகள் வீசப்பட்டதும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும், பீதியில் ஓடிய இசை ரசிகர்களில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் தீப்பற்றியதில் அரங்கம் முழுவதும் எரிந்து நாசமானது.

துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பலில் இரண்டுக்கும் மேற்பட்டோர் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

சமீபத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட புதினின் ஆட்சியில், ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க  2023 ஆம் ஆண்டில் மட்டும் 8,565 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *