“கோயம்புத்தூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்”

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.80க்குட்பட்ட ஒக்கிலியர் காலனி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமினை” துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள் முன்னிலையில், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று துவக்கி வைத்து, 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பினையும் நடத்தி வைத்து, சீதனப்பொருட்களை வழங்கினார்.

img 20240928 wa00153227778478591397781 - "கோயம்புத்தூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்"

img 20240928 wa0014492861121032440050 - "கோயம்புத்தூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்"img 20240928 wa0013399349866187651825 - "கோயம்புத்தூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்"

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் படி, கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.80க்குட்பட்ட ஒக்கிலியர் காலனி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், துவக்கி வைத்தார்கள்.

இம்முகாமில் நீரழிவு நோய், இரத்த அழுத்த நோய், அறுவை சிகிச்சை நோய் ஆலோசனை, எலும்பு மூட்டு சிகிச்சை, கர்ப்பிணி தார்மார்கள் மற்றும் மகளிர் நல மருத்துவம், பல் மருத்தும், கண் மருத்துவம், கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை, குழந்தைகள் நல மருத்துவம். காது, மூக்கு, தொண்டை நல மருத்துவம், தோல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவம், இ.சி.ஜி ஸ்கேன், இரத்தம், சளி, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேவைபடுவோர்களுக்கு உடனடி சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இம்முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.

இதையும் படிக்க  சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில்புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது!

முன்னதாக, பொது சுகாதாரக் குழு தலைவர் திரு.பெ.மாரிசெல்வன் அவர்களின், சொந்த நிதியில் சுமார் 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பினை நடத்தி வைத்து. சீதனப்பொருட்களான புடவை, ஜாக்கெட் வளையல்கள், பழ வகைகள் உள்ளிட்ட சீதனப்பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், வழங்கினார். மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி, இம்முகாமில் பொதுசுகாதாரம், நோய்தடுப்பு மருந்துத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்து காட்சியினையும் பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரக்குழு தலைவர் திரு.மாரிசெல்வன், நகர்நல அலுவலர் மரு.பூபதி. மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், மண்டல மருத்துவ அலுவலர் மரு.தினேஷ் பெரியசாமி, சுகாதார அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள். மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கம் செய்தியாளர் சந்திப்பு

Sat Sep 28 , 2024
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில், ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், பேராசியர் காமராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பின் போது, ஈஷா அறக்கட்டளையில் பணிபுரியும் டாக்டர் சரவணன் மூர்த்தி மீது சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில், மேல்நடவடிக்கை எடுக்காததற்கு […]
IMG 20240928 WA0030 - கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கம் செய்தியாளர் சந்திப்பு

You May Like