Monday, October 27

குரங்கம்மை தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் இந்தியா நிறுவனம்…

கொரோனா தொற்றுக்குப் பிறகு, உலகம் முழுவதும் குரங்கம்மை (Monkeypox) தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே காணப்பட்ட இந்த நோய், தற்போது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளது. இதை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மையை உலகளவில் பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நம் அண்டை நாடுகளிலும் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சூழ்நிலையில், இந்தியா பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. சர்வதேச பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன மற்றும் நாட்டின் 32 ஆய்வகங்களில் குரங்கம்மை பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India) குரங்கம்மை தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நேற்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீரம் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா, “ஆபத்தில் இருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற, குரங்கம்மைக்கான தடுப்பூசி தயாரிப்பில் நாம் செயல்பட்டு வருகிறோம். ஓராண்டுக்குள் தடுப்பூசி தொடர்பான நல்ல செய்தி வருமென நம்புகிறோம்,” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க  அரசு மருத்துவமனையில் சிக்கலான குடல் இணைப்பு அறுவை சிகிச்சை செய்து சாதனை...

கடந்த 2019 இறுதியில் பரவிய கொரோனா தொற்றுக்கான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை சீரம் இந்தியா தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *