கோவை ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை, செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் புதிய கருத்துகளை விளக்கும் கருத்தரங்கத்தை செப்டம்பர் 22 அன்று ஹோட்டல் ரெசிடென்சி டவரில் நடத்த உள்ளது.
இந்த நிகழ்வில், 300-க்கும் மேற்பட்ட பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நாடு முழுவதும் கலந்து கொண்டு, தங்கள் அறிவு மற்றும் அனுபவங்களை பகிர உள்ளனர். நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக, வெளிநாட்டு நிபுணர்களின் விரிவுரைகள் இடம்பெறும்.
நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
ரோபோடிக் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான வெளிநாட்டு நிபுணர்களின் விரிவுரைகள்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோபோ செய்கிற முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் நேரடி ஒளிபரப்பு.
எலும்பியல் துறையில் உள்ள புதுமையான பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான கண்காட்சி.