கோவேக்சின் செலுத்திக்கொண்ட சுமாா் 30% பேருக்கு பாதிப்பு!

கொரோனா வைரஸ்க்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் சுமாா் 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னா் உடல்நிலை பாதிப்பு  ஏற்பட்டுள்ளதாக ‘ஸ்பிரிங்கா் நேச்சா்’ என்ற ஆய்விதழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட BBV152 கோவேக்சின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னா் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ஆம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.
கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6 சதவீதம் பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7 சதவீதம் பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்துள்ளனா். ஏற்கெனவே கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு அரிதாக ரத்தம் உறைவு ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று அந்தத் தடுப்பூசியைத் தயாரித்த பிரிட்டனின் அஸ்ட்ராஸெனகா நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  இதோ உடல் எடை குறைக்க உதவும் மருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜாமீன் கோரி கவிதா மனு...

Fri May 17 , 2024
மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் சட்டமேலவை உறுப்பினா் கவிதாவின் ஜாமீன் மனுக்கு பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு டெல்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. டெல்லி மதுபான  கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மாா்ச் மாதம் 15-ஆம் தேதி ஹைதராபாதில் கைது செய்யப்பட்டாா்.திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, […]
30 Telakapalli Ravi new - ஜாமீன் கோரி கவிதா மனு...

You May Like