Thursday, October 30

தமிழக சட்டக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி: ஐகோர்ட் கிளை அதிருப்தி…

தமிழகத்தின் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சகா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, தேனி, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் நிரந்தர விரிவுரையாளர்கள் குறைவாக உள்ளனர்.

நீதிபதிகள் கண்டனம்

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் எல். விக்டோரியா கவுரி அமர்வு இந்த மனுவை இன்று (செப்டம்பர் 20) விசாரித்தது. 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பது, அடிப்படை வசதிகள் இல்லாத நிலை குறித்து நீதிபதிகள் கருத்து வெளியிட்டனர்.

நீதிமன்றம், “சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர்-மாணவர் விகிதம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், காலிப்பணியிடங்களை நிரப்ப மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்” போன்ற விவரங்களைத் தமிழக உயர்கல்வித் துறையிடம் கேட்டுள்ளது.

விசாரணை ஒத்திவைப்பு

அக்டோபர் 30 ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிக்க  பெண்களுக்கான உதவித்தொகையை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் கவுன்சில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *