உலகின் இளைய பேராசிரியர் என்று அழைக்கப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுபோர்னோ லாக் பாரி, அடுத்த வாரம் அமெரிக்க உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற இளைய மாணவராக வரலாற்றை படைக்க உள்ளார். பாரி கணிதம் மற்றும் இயற்பியல் படிப்பதற்காக நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சேர திட்டமிடப்பட்டுள்ளாதாகவும்,அங்கு அவர் முழு உதவித்தொகையையும் பெற்றுள்ளார். சுபோர்னோ இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார் மற்றும் இந்தியாவில் கல்லூரி வகுப்புகளுக்கு கற்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.