Sunday, April 27

தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு…

தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் 2024-ல் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கான தனித்தேர்வர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குவதற்கான கால அவகாசம் இன்று (டிசம்பர் 17) முடிவடைய இருந்தது.

தொடர்ந்து நிலவும் கனமழை காரணமாக, தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்க வழங்கப்பட்டுள்ள அவகாசம் டிசம்பர் 20, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தனித்தேர்வர்கள், தங்களின் விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களை நிரப்பி, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது தேர்வுக் கட்டணமாக ரூ.125/- செலுத்த வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு, தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

 

 
இதையும் படிக்க  CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *