Monday, October 27

குழந்தைகள் மையத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா…

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.52க்குட்பட்ட பீளமேடு, ஹட்கோ காலனி பகுதியில், தனியார் பங்களிப்புடன் (கோயம்புத்தூர் வேல்முருகன் எண்டர்பிரைசஸ் பி.லிமிடெட்) சார்பில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.33.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கற்றுக்கொள்ளுதல் வசதியுடன் கூடிய நவீன குழந்தைகள் நல மையத்தினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

குழந்தைகள் மையத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா...
இந்த கட்டிடத்தில் குழந்தைகள் விளையாடக்கூடிய பார்க் வசதிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் குழந்தைகள் பயன்படும் வகையில் அனைத்து வசதிகளும் இருக்கின்றன

இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், மண்டலத் தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, வேல்முருகன் எண்டர்பிரைசஸ் பொது மேலாளர் திரு.வேலுமணி, WOW EDUCARE நிறுவனர் திரு.ரூபன், இயக்குநர்கள் திரு.சந்திரசேகர், திருமதி.காமாட்சி ஜெயராம், நிர்வாக இயக்குநர் திரு.சாம் நிக்கோலஸ், உதவி பொறியாளர்கள் திருமதி.ஜெகதீஸ்வரி, திரு.கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

இதையும் படிக்க  IAS பவன் குமாரின் பயணம்....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *