Sunday, September 14

போலி பல்கலைக்கழக பட்டியல்!

பல்கலைக்கழக மானியக்குழு, அங்கீகாரத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை UGC இணையதளத்தில் வெளியிட்டது. நாடு முழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று UGC  அறிவித்துள்ளது.இந்த பட்டியலில், தில்லியில் 8, உத்தரப்பிரதேசத்தில் 4, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளத்தில் தலா 2-ம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தலா 1  உட்பட மொத்தம் 21 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள எந்த பல்கலைக்கழகமும் இந்தப் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்வையாகும்.பிற மாநிலக் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் இப்பட்டியலை அறிய  வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களை யுஜிசியின் https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்க  பிஇஏபி ஆந்திர இடைநிலை தேர்வு முடிவு  இன்று...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *