கோவை சுங்கம் பகுதியில் உள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் மாணவர்களின் அறிவு சார் கலை விழாப் போட்டிகள் கொண்டாடப்பட்டது.இந்த போட்டிகளை கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியின் தாளாளர் அருட் தந்தை ஆரோக்கிய ததேயுஸ் அடிகளார்,கலந்து கொண்டு தொடக்கி வைத்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்.
இதில் முக வர்ணம் பூசுதல், கோலப் போட்டி, படம் வரைதல், கையில் வண்ணம் பூசுதல், களிமண்ணால் உருவம் செய்தல் போன்ற போட்டிகள் நடை பெற்றன.அதே போல தனிப்பாடல், பேச்சில்லா நாடகம், கிராமியநடனம், மேற்கத்தியநடனம், நகைச்சுவை எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் பீட்டர்ராஜ், மற்றும் மைக்கேல் ஜாப் கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாக்கியம் கமலா, உதவி பேராசிரியர் பாலகுருநாதன், ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
Leave a Reply