மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்…

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கியதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு உயிரிழந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருதை மே 9-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.இந்த நிலையில், விஜயகாந்துக்கு விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து ரஜினி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.“விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதை மத்திய அரசு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது .பத்மவிருதுகள் வரலாற்றில் அவரது பெயரை சேர்த்துள்ளது அவருக்கு இன்னும் பெருமை சேர்த்திருக்கிறது.
விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திடீரென தோன்றி பல சாதனைகளை செய்து மறைந்துவிட்டார் . இனிமேல் விஜயகாந்த்தை போன்று ஒருவரை பார்க்கவே முடியாது. மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டனின் பெயர் வாழ்க.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க  ஜப்பானில் '777சார்லி' திரைப்படம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

Thu May 16 , 2024
ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா புதன்கிழமை ஃபெடரேஷன் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்றார். அவர் 82.27 மீட்டர் எறிந்தார் மற்றும் 0.21 மீட்டர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 82.06 மீட்டர் எறிந்த டி. பி. மனு இரண்டாவது இடத்தையும், 78.39 மீட்டர் எறிந்த உத்தம் பாட்டீல் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இதையும் படிக்க  புதுச்சேரியில் நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பு...
Screenshot 20240516 112637 inshorts | தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா