Sunday, April 27

விமானப்படை சாகச நிகழ்ச்சி பொதுமக்கள் கண்டு களிப்பு…

மெரீனா கடற்கரையில் இந்திய விமானப்படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி 21 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரீனாவில் திரண்டதால் அப்பகுதி விழாக்கோலமாக இருந்தது.

நிகழ்ச்சியின் பொழுதில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த 6,500 போலீசாரும், 1,500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சாகச நிகழ்ச்சியில் ரஃபேல், மிக்-29, தேஜஸ், டகோட்டா, பிலாட்டஸ், ஹார்வர்ட், டார்னியர், மிராஜ், ஜாகுவார், சுகோய், சராங் குழு, சூர்ய கிரண் குழு, ஆகாஷ் கங்கா குழு, சேதக் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சாகசங்களில் ஈடுபட்டு பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தன.

முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மெரீனாவில் நேரில் வந்து சாகச நிகழ்ச்சியை கண்டுரசித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. தயாநிதி மாறன் மற்றும் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்று, விமான சாகசங்களை கண்டு ரசித்தனர்.

இதையும் படிக்க  அவதார் 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *