36 மணி  நேரத்தில் 1068 கலைஞர்கள் பங்கு பெற்ற உலக சாதனை நிகழ்ச்சி…

பொள்ளாச்சியில் கலாம் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற 1068 கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் V. ஜெயராமன் பங்கேற்பு…

img 20241111 wa0042548015259994052114 | 36 மணி  நேரத்தில் 1068 கலைஞர்கள் பங்கு பெற்ற உலக சாதனை நிகழ்ச்சி...<br>



அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையிலும்         இளைய தலைமுறையினர் இடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி மின்னல் தனியார் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பில் பாலக்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலாம் உலக சாதனைக்காக 36 மணி நேரம் இடைவிடா கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

img 20241111 wa00373365300283978093284 | 36 மணி  நேரத்தில் 1068 கலைஞர்கள் பங்கு பெற்ற உலக சாதனை நிகழ்ச்சி...<br>

கோவை, சென்னை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரதம், குச்சிபுடி, வள்ளிகும்மி, பழங்குடியினர் மற்றும் படுகர் இன மக்களின் நடனம், ஒயிலாட்டம்  மற்றும் பள்ளி மாணவர்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கராத்தே, சிலம்பம், பறை இசை,,யோகா  உள்ளிட்ட 370 நிகழ்வுகள் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி நேரம் கிட்டத்தட்ட 36 மணிநேரம் நடைபெற்று நிறைவு பெற்றது நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினர் சரியாக நேற்று இரவு 8 மணிக்கு 36 மணி நேரம் நிறைவடைந்தது  கலாம் உலக சாதனை நிகழ்வில் பங்கு பெற்ற 1068 கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியை திறம்பட நடத்தி சாதனை புரிந்த மின்னல் சீனிவாசனுக்கு கலாம் உலக சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதையும் படிக்க  மெட் காலா : பிரியங்கா சோப்ரா
img 20241111 wa00355826976777144873713 | 36 மணி  நேரத்தில் 1068 கலைஞர்கள் பங்கு பெற்ற உலக சாதனை நிகழ்ச்சி...<br>

அலையன்ஸ் இயக்கத்தின் தென்னிந்திய கூட்டு மாவட்ட செயலாளர். மகேஷ் குமார் மாவட்ட ஆளுநர் ரகுராமன் தமிழிசை சங்க செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் V. ஜெயராமன் கலாம் உலக சாதனை நிகழ்ச்சியை திறம்பட நடத்திய ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் V. கிருஷ்ணகுமார் அலையன்ஸ் இயக்கத்தின் பன்னாட்டு தலைவர் C.பாலச்சந்திரன் நகர மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராஜா உள்ளிட்டோர் ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செல்வ மணிகண்டன் கமலக்கண்ணன் தினேஷ் பாபு ஆகியோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த - அமைச்சர்...

Mon Nov 11 , 2024
கோவை கவுண்டம்பாளையம் குடியிருப்பு  மனை பகுதியில் அரசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 413 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை மார்ட்டின் குழுமம் தத்தெடுத்து தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் 7 கோடி ரூபாய் செலவில் புனரமைத்தும் புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், நுழைவு வாயில், விளையாட்டு மைதானம், கலையரங்கம் உள்ளிட்டவைகளை கட்டி தந்துள்ளனர். மேலும் பள்ளி வளாகங்களில் சிசிடிவி வகுப்பறைகளில்  […]
IMG WA jpg