கோவையில் பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பாக பி.எஸ்.ஜி. மாணவர் இல்லம் செயல் பட்டு வருகின்றது. சமூக மற்றும் பொருளாதாரப் ஏற்றத்தாழ்வுகளை போக்க பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வரும் இந்த இல்லத்தில் ஆதரவற்ற மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை பி.எஸ்.ஜி.அறக்கட்டளை நிர்வாகிகள் மாணவர்களுடன் இணைந்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில், முன்னதாக மாணவர்களுக்கு புத்தாடைகள், […]
தமிழ்நாடு
கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பெயர், வயது உள்ளிட்ட திருத்தங்களை செய்ய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இத்துடன் தொடர்புடைய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (29.10.2024) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் அவர்களால் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் பொள்ளாச்சியின் சார்ஆட்சியர் கேத்தரின் சரண்யா பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் வாக்காளர் பதிவு […]
வரவிருக்கும் தீபாவளி பண்டிகை நாளில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என உறுதி செய்வதற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது, அதிக கட்டணம் வசூலிக்கமாட்டோம் என உரிமையாளர்கள் உறுதி அளித்தனர். இதை அமல்படுத்தும் வகையில் ஆன்லைன் முன்பதிவு செயலிகளுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், தீபாவளி முன்னிட்டு, சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், […]
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தில், ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது. ராம்ராஜ் காட்டனின் வேட்டி, சர்ட்டுகள், பனி யன்கள் உள்ளிட்டவை, அதன் ஷோரூம்களில் மட் டுமின்றி, முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும் கிடைக் கின்றன. இந்நிலையில், கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில், ஷோரூம் டி.வி. எதிரில், புதிய ஷோரூம் திறப்பு விழா, நேற்று நடந்தது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் வரவேற்றார். ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி தலைவர்தங்க […]
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அண்மையில் 3% உயர்த்தப்பட்டது. மேலும், ரேஷன் கடை பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கிய பிறகு, கடந்த […]
சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை 14 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று (அக்.29) முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினமும் இருமார்க்கமாகவும் தலா 45 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளது. சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே மூன்று பாதைகளில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் இரண்டு பாதையில் புறநகர் ரயில்கள், மற்றொரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் இயங்கின. […]
பொள்ளாச்சி அருகே ஆனைமலை உப்பாற்றங்கரையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றதாகும் இங்கு நடைபெறும் கோவில் திருவிழாவில் மயான கொள்ளை குண்டம் இறங்குதல் போன்ற விழாக்களில் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வர் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.. இக்கோவிலின் கும்பாபிஷேக பெருவிழா 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது இதனை ஒட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணிகள், வர்ணம் பூசுதல், […]
கோவையை சேர்ந்த கெளசிகா நீர்கரங்கள் கூட்டமைப்பு சார்பாக கோவையை சுற்றி பல நீர்நிலைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் கோவை வடக்கு பகுதியின் வாழ்வாதாரமான சின்னவேடம்பட்டி ஏரி சீரமைப்பு பணிகள் மற்றும் தொடர் பராமரிப்பு பணிகள் உட்பட பசுமை பணிகள் மற்றும் குழந்தைகள் பெரியவர்களுக்காக பறவைகள் நடைகானல், திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் போன்ற பணிகள் கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இதில் 342 வது வார […]
பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொன்னே கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வரும் வேலுமணி என்பவர் கடந்த 21.10.2024 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்குச் சென்றுள்ளார். பணிகளை முடித்து இரவு 9.00 மணிக்கு வந்து பார்க்கும்போது வீட்டு முன் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5.5 பவுண் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது […]
புகைப்பிடிப்பதால் மட்டும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதில்லை, சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். கோவை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை நுரையீரல் மருத்துவர்கள் சங்கம் சார்பில், கோவை மாநகர முன் கள பணியாளர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் புரூக் பாண்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. முகாமில் மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட […]