பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவின் நான்கு வழிச்சாலையில், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற ஒரு சொகுசு கார், தாமரைக்குளம் அருகே முன்போன மூன்று இருசக்கர வாகனங்களை மோதியது. இந்த விபத்தில், ஒருவரை உயிரிழந்த நிலையில்,ஆறு பேர் கடுமையாக காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தால், கோவை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து மிகுந்த இடையூறுக்கு உள்ளானது. கிணத்துக்கடவு போலீசார், சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, […]

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தில் செயல்படும் உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம், முன்னணி தனியார் உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பயோராட் (BioRad) உடன் இணைந்து, நிகழ்நேர பி.சி.ஆர் (RT-PCR) குறித்த ஒரு நாள் நேரடி பயிற்சி நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது. இந்த பயிற்சியில், பல்வேறு துறை பேராசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 57 முதுகலை மாணவர்கள் பங்கேற்றனர். […]

பொள்ளாச்சியில் திருச்சி சிவா பேட்டி அளித்தார், அப்போது உயிர்காக்கும் மருந்துகள் விற்பனையில் இடைத்தரர்கள் அதிக லாபம் ஈட்டுவதாக கூறினார்.பெருமதிப்பிற்குரிய மனைவிமார்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஒரு பகுதியாக, கணவன் மனைவி உறவின் நெருக்கத்தை உணர்த்தும் விதமாக, கணவன்மார்கள் மற்றும் மனைவிமார்கள் […]

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், நகர மன்ற கூட்ட அரங்கில், தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் ஆணையாளர் கணேசன் முன்னிலையில் அவசர கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் நகர மன்ற கூட்டமாகக் கருதப்படும் இக்கூட்டத்தில், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆணையாளர் கணேசனை வரவேற்று, அவருக்கு சால்வை அணிவித்து மலர் கொத்து வழங்கினார். இக்கூட்டத்தில், பெரும்பாலான நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சியின் சொந்தமான கட்டிடங்கள் […]

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை தாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் இவரது மனைவி சுகன்யா 30 வயது இவர்களுக்கு 7 வயதில் தனுஸ்ரீ மற்றும் 4 வயதில் அகிலன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அருண்குமார் மற்றும் சுகன்யா கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது மன உளைச்சலில் இருந்த சுகன்யா தனது […]

தமிழகத்தில் இளைஞர்கள் அதிகளவில் மது அருந்துவது, போதை பொருட்கள் உட்கொள்வது, ஆபாச செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் பெண்கள் மட்டுமின்றி சமூகத்திலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் மீது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தி மகளிர் அணி சார்பாக, செப்டம்பர் மாதம் முழுவதும் மாபெரும் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான லோகோ வெளியீட்டு விழா இன்று கோவையில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த […]

பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது நகரம் முழுவதும் உள்ள 36 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் வணிக வளாகங்கள் திருமண மண்டபங்கள் உணவகங்கள் தங்கும் விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இனைப்புகள் கொடுக்கப்பட்டு கழிவு நீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு மாட்டு சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறது. ஆனால் நகரின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே […]

பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து, கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்படும். இதில், சில லாரிகள் சட்ட விரோதமாக அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக, கற்கள் ஏற்றி செல்லுவது வழக்கமாக அமைந்துள்ளது. கோபாலபுரம் மற்றும் வளந்தாயமரம் சோதனை சாவடிகள் மற்றும் மாற்றுப் பாதைகளால் கேரளாவுக்கு அதிக அளவு கற்கள் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதற்கிணங்க, இணை போக்குவரத்து ஆணையர் சிவக்குமரனின் உத்தரவின் அடிப்படையில், […]

TNPGTA கோவை வருவாய் மாவட்ட தலைவராக மு. முகமது காஜாமுகைதீன் தேர்வு கோவை மாவட்டத்தில் வருவாய் மாவட்ட தலைவர் பொறுப்பிற்கு நடைபெற்ற ஜனநாயக தேர்தலில் கோவை வருவாய் மாவட்ட தலைவராக மு.முகமது காஜா முகைதீன் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக TNPGT மாநில பொருளாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார் கோவை மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முகமது காஜா முகைதீன் மற்றும் கோவை மாவட்ட தேர்தலில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் மாநில கழகத்தின் […]

போதை கலாச்சாரத்திற்கு எதிராக ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் மகளிரணி சார்பில், “ஒழுக்கமே சுதந்திரம்” என்ற கருத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் 30 வரை நாடுதழுவிய அளவில் பல்வேறு விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி, கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தெரிவித்தார். திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, மும்தாஜ் பேசுகையில், […]