
அருள்மிகு மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
கோவை மாவட்டம், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 12.12.2024 அன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருள் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, 48 நாட்கள் நிலையான மண்டல பூஜை இன்று நிறைவடைந்தது. அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். முரளி கிருஷ்ணன் தலைமையில் நடந்த விழாவில் திருப்பரங்குன்றம் சிவாச்சாரியார் சிவஸ்ரீ ராஜபட்டர் குழுவினர் சிறப்பாக பூஜையை ஏற்பாடு செய்தனர். இதில் உதவி ஆணையர் கைலாச மூர்த்தி, சூரிய நாராயணர் கோவில் தம்பிரான் சுவாமிநாத சுவாமிகள், அறங்காவலர் மஞ்சுளாதேவி, கோவில் நிர்வாகம் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
...