
திருப்போரூர் கந்தசாமி கோயிலில் உண்டியலில் கிடைத்த ஐபோன்: உரிமையாளர் கோரிக்கையை நிர்வாகம் மறுத்தது…
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள பிரசித்திபெற்ற கந்தசாமி கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் விலைமதிப்புள்ள ஐபோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உரிமையாளர் அதனை திரும்ப பெற முயன்ற போதும், கோயில் நிர்வாகம் அதனை "முருகனுக்கு சொந்தமான காணிக்கை" என்று தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு பிறகு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி மற்றும் செயல் அலுவலர் குமரவேல் தலைமையில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில்,மொத்தம் ரூ.52 லட்சம் ரொக்கம்,289 கிராம் தங்கம்,6920 கிராம் வெள்ளி,தாலி, கண்மலர், வேல் போன்ற பொருட்களுடன் ஐபோனும் கண்டுபிடிக்கப்பட்டது.கண்டுபிடிக்கப்பட்ட ஐபோன் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்குச் சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டது. தினேஷ், அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தபோது, ...