கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் உருவான நாளான அக்டோபர் 7ம் தேதி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்திருந்தது, அதன்படி அக்டோபர் 7ஆம் தேதியான இன்று பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
பரமக்குளம் ஆழியார் பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே. பழனிச்சாமி கவுண்டர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் கே.எஸ். ராவ் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து மலர் தூவி மரியாதை செய்தார்.
இதனைத்தொடர்ந்துகோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மகன் மாணிக்கம், திருமூர்த்தி நீர்த்தேக்க திட்ட குழு தலைவர் பரமசிவம், ஆழியார் அணை பாசன திட்ட தலைவர் செந்தில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட விவசாயிகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதில் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.