ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் – கருத்தரங்கு

IMG 20240828 WA0005 - ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் 'சமவெளியில் மர வாசனை பயிர்கள் - கருத்தரங்கு

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் செப்டம்பர் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், நறுமணப் பயிர்கள், அவகோடோ மற்றும் கிராம்பு உள்ளிட்ட மரவாசனை பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இக்கருத்தரங்கை முன்னிட்டு, கோவையில் இன்று (28/08/2024) பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் இதில் கலந்து கொண்டு விரிவான விளக்கங்கள் அளித்தார்.

சமவெளியில் மரவாசனைப் பயிர்களை விளைவித்து விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்ற நோக்கில் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (IISR), இந்திய மசாலா வாரியம் (SBI), மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR) ஆகிய மத்திய அரசின் விஞ்ஞானிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

இதையும் படிக்க  அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்…

இக்கருத்தரங்கில் சமவெளியில் அவகாடோ மரங்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர உள்ளனர். தென்னையில் இணை மரங்களாக மரவாசனை மரப்பயிர்களை சாகுபடி செய்வதால் பல பயிர்கள் வளர்க்க முடியும். இதனால் பூச்சி, நோய் தாக்குதல் குறையும்.

கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90081, 94425 90079 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ஆம் ஆண்டு சத்குரு அவர்களால் துவங்கப்பட்டது. மரம் வளர்ப்பு மூலம் மண் தரம், நீர்ப்பிடிப்பு திறன் மேம்படும். ஐநா உள்ளிட்ட சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்த திட்டத்தை அங்கீகரித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts