என் ஜி பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 11ஆம் ஆண்டு தமிழ் அறிஞர்களுக்கான விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா ..
கோவை மாவட்டம் காளபட்டியில் உள்ள டாக்டர் என் ஜி பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 11ஆம் ஆண்டு தமிழ் அறிஞர்களுக்கான விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா டாக்டர் என்.ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது.டாக்டர் என் ஜி பி கல்விக்குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி இவ்விழாவில் வரவேற்புரை வழங்கினார்.மருத்துவர் ரேஷ்மி ராமநாதனின் உடலியல் நடைமுறைக் கையேட்டு நூலை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி வெளியிட்டுத் தலைமையுரை வழங்கினார்.
விருது பெறுபவர்கள் பற்றி பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் அறிமுகவுரையாற்றினார். வேலம்மாள் கல்வி எம் வீமுத்துராமலிங்கம் அறக்கட்டளையின் விருதுகள் தலைவர் வழங்கிச் சிறப்புரையாற்றினார் மருதநாயகம், ஞானசுந்தரம் இயகாகோ என்.சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எழுத்தாளர் வண்ணதாசன் பெரியசாமித்தூரன் படைப்பாளர் விருது பெற்றார். பாண்டுரங்கன் உவேசா.தமிழறிஞர் விருதும், வெங்கடேஸ்வரன் டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருதும் பெற்றனர். சிறப்பு விருதுகள் சேதுபதி எழுத்தாளர் புன்னகைபூ ஜெயக்குமார், சூலூர் ஆனந்தி ஆகியோர் விருது பெற்ற விருதாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாரதி பாஸ்கர் வாழ்த்துரை வழங்க உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் முத்துசாமி அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.