Thursday, December 26

சூறாவளி காற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் வாழை பயிர்கள் சேதமடைந்தது.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.

பாதிக்கப்பட்ட வாழை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்ததை அடுத்து அப்பகுதியில் ஆய்வுக்காக வந்த அமைச்சர் முத்துசாமி விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார் ஆனால் தற்போது வரை பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு இதுவரை எந்தவித இழப்பீட்டுத் தொகையும் வழங்காததால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி -பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேதமடைந்த வாழை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழை கன்றுகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு மேலாகியும் அமைச்சர் ஆய்வு செய்த பிறகும் இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் வேர்வாடல் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை மேலும் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் கள் இறக்கி விற்பனை செய்யும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவே இந்த அரசு விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை எனவே இங்குள்ள விவசாய நிலங்களை விற்றுவிட்டு கேரளா மாநிலம் செல்ல பட்டா வழங்க வேண்டும் என்றும் மேலும் என ஆதங்கத்தை விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க  கோவையில் ஆட்டுக் குட்டிகளை வேட்டையாடிய மர்ம விலங்கு - தீவிர விசாரணையில் வனத்துறை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *