Thursday, December 26

புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த – அமைச்சர்…

கோவை கவுண்டம்பாளையம் குடியிருப்பு  மனை பகுதியில் அரசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 413 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை மார்ட்டின் குழுமம் தத்தெடுத்து தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் 7 கோடி ரூபாய் செலவில் புனரமைத்தும் புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், நுழைவு வாயில், விளையாட்டு மைதானம், கலையரங்கம் உள்ளிட்டவைகளை கட்டி தந்துள்ளனர்.

புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த - அமைச்சர்...
புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த - அமைச்சர்...

மேலும் பள்ளி வளாகங்களில் சிசிடிவி வகுப்பறைகளில்  மேசை நாற்காலிகள் சுற்றிலும் மரக்கன்றுகள் என பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளனர், அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடங்களை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வகுப்பறைகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு 44,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தமிழக முதலமைச்சர் ஐந்து லட்சம் தனது சொந்த நிதியை வழங்கி சி எஸ் ஆர் பங்களிப்பை தொடங்கி வைத்த நிலையில் இன்றுவரை சுமார் 455 கோடி ரூபாய் வரை சேர்ந்துள்ளதாகவும் அதில் 360 கோடி ரூபாய்க்கு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்திகளிடம் பேசும் போது ஆசிரியர்களுக்கு எம் எஸ் பணிகள் கொடுப்பதால் பணிச்சுமை அதிகமாக உள்ளது என்ற கேள்விக்கு புதிதாக 6 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் ஆசிரியர் பணியை மட்டுமே மேற்கொள்வதாக தெரிவித்தார் அமரன் திரைப்படம் அனைத்து பள்ளிகளிலும் திரைப்படப்பட வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு அது அவரது கருத்து என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்  கோவை மாநகர மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்  மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாட்டின் குழும இயக்குனர்  லீமா ரோஸ் மார்ட்டின், நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் திரைப்பட நடிகர் ஆரி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  கிணத்துக்கடவில் கள்ள சந்தையில் மது விற்ற 2 பேர் கைது: 260 மது பாட்டில்கள் பறிமுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *