கேரளா மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம், நீலேஸ்வரம் அருகே உள்ள கோவில் விழாவில் நடந்த வெடி விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 8 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து திங்கள்கிழமை இரவு நிகழ்ந்ததாகவும், தகவல்கள் கூறுகின்றன.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள், கலெக்டர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.