
பொள்ளாச்சி அருகே ஆனைமலை உப்பாற்றங்கரையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றதாகும் இங்கு நடைபெறும் கோவில் திருவிழாவில் மயான கொள்ளை குண்டம் இறங்குதல் போன்ற விழாக்களில் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வர் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அம்மனை வழிபட்டு செல்கின்றனர்..
இக்கோவிலின் கும்பாபிஷேக பெருவிழா 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது இதனை ஒட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணிகள், வர்ணம் பூசுதல், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணா தலைமையில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி அறங்காவலர் உறுப்பினர்கள் மஞ்சுளா தேவி மருதமுத்து திருமுருகன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது தமிழக முதல்வர் ஆலோசனைப்படி உலக புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் நடைபெறும் என்றும் இந்த விழாவில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாத வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார் மேலும் தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.