“பென்காட் சிலாட்: தமிழக வீரர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள்”

IMG 20241020 WA0064 - "பென்காட் சிலாட்: தமிழக வீரர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள்"

இந்தோனேசியாவின் தற்காப்புக்கலையான பென்காட் சிலாட், தமிழகத்தில் தற்காப்புக்கலையாக உள்ளது. 2018-ம் ஆண்டிலிருந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இது சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 8-வது ஆசிய பென்காட் சிலாட் போட்டி உஸ்பெகிஸ்தானில் கடந்த 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், ஆசிய கண்டத்திலிருந்து 16 நாடுகள் பங்கேற்றன.

img 20241020 wa00654679510411074101180 - "பென்காட் சிலாட்: தமிழக வீரர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள்"

இந்திய அணியில், தமிழகத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் உள்பட 36 வீரர்கள் கலந்துகொண்டனர். இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. சண்டைப் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த கமலேஷ் (95 கிலோ) மற்றும் அரவிந்த் பிரகாஷ் (90 கிலோ) வெண்கல பதக்கங்களை வென்றனர். பதக்கங்களை வென்ற வீரர்கள் திருச்சி விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

img 20241020 wa00634218141644036397086 - "பென்காட் சிலாட்: தமிழக வீரர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள்"

இந்த வீரர்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பென்காட் சிலாட் சேர்க்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

img 20241020 wa00668245981159819414417 - "பென்காட் சிலாட்: தமிழக வீரர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள்"

இதையும் படிக்க  தேசிய அளவில் நடைபெற்ற கோ கேம் : கோவையைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவி தங்கம் வென்று சாதனை !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *