Sunday, December 22

பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்க அரசுக்கு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை..

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் மண்ணுரிமை மீட்பு அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி திடலில் நடைபெற்றது நகர தலைவர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார்.

img 20240926 wa00033044053327962759877 | பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்க அரசுக்கு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை..

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது தமிழகத்தை 50 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்கின்ற திராவிட ஆட்சியாளர்கள் நிலத்தின் மீது கவனம் செலுத்த முடியாத காரணத்தால் பஞ்சமி நிலங்களை மீட்டு இல்லாத ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

உழுதவனுக்கே நிலம் உழைப்பவனுக்கே அதிகாரம் என்ற அடிப்படையில் யாரெல்லாம் நிலத்தை பிட்டு விரட்டப்பட்டவர்களோ அவர்கள் குடும்பத்திற்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளாகியும் இன்னும் தமிழகத்தில் பல கிராமங்களில் இரட்டை குவளை, இரட்டை சுடுகாடு முறை,கோவில் நுழைவு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது எனவே தமிழக அரசின் சமூக நலத்துறை இதன் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க  "தமிழகத்தில் 3 புதிய சுங்கச் சாவடிகள்: கட்டண விவரங்கள் வெளியீடு"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *