நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு மற்றும் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். இதன் பேரில், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். கே. பகவதி தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் பொள்ளாச்சியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் புகைப்படக் கண்காட்சியை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் நகர, பேரூர், ஒன்றிய மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.