மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.