கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மே 30-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. பெண் போலீசாரை அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக கடந்த 4-ஆம் தேதி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், சவுக்கு சங்கா் ஜாமீன் வழங்கக் கோரி, மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். ஏற்கெனவே இந்த மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 30ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.