- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 அறைகள் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
- விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் புதூரில் காத்தநாடார் தெருவைச் சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது .இந்த நிலையில் ஆலையில் காலை 6.15 மணியளவில் வெடி மருந்து மூலப்பொருள்கள் வைத்திருக்கும் அரையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
- இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் ஐந்தாவது முறையாகப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழந்துள்ளது.