*சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஞாயிற்றுக்கிழமை போட்டிக்குப் பிறகு, சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், “இளைய விக்கெட் கீப்பர் அந்த மூன்று சிக்சர்களை அடித்தது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது, அதுவே வித்தியாசமாக இருந்தது” என்றார். ஹார்டிக் பாண்டியாவிடம் இருந்து தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்து 20 ரன்கள் (4 பந்துகள்) எடுத்த எம்.எஸ். தோனியை குறிப்பிட்டு கெய்க்வாட் இவ்வாறு பேசினார்.
*”இதுபோன்ற மைதானத்திற்கு 10-15 ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டன” என்று கெய்க்வாட் கூறினார்.