Thursday, April 10

ரயில் பயணத்துக்கு 2 நிமிடத்தில் டிக்கெட்! இந்திய ரயில்வேயின் புதிய சூப்பர் ஆப்…

ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுப்பதும், முன்பதிவு செய்வதும் இன்னும் பலருக்கு சிரமமாகவே உள்ளது. இதனை எளிமையாக்க பல அம்சங்களை ஏற்கனவே ரயில்வே அறிமுகப்படுத்தியிருந்தாலும், தற்போது புதிய சூப்பர் ஆப் களமிறங்கியுள்ளது. இந்த ஆப்பின் மூலம் 2 நிமிடங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, ரயிலின் அனைத்து தகவல்களையும் பெறலாம்.

இந்த புதிய ரயில்வே ஆப்பின் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு அனுபவத்தில் பெரிய மாற்றத்தை காணப்போவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். ரயில்வேயின் அனைத்து சேவைகளும் ஒரே செயலியில் கிடைக்கும்.

இப்போது IRCTC ஆப் அல்லது இணையதளத்தை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டும். மற்ற செயலிகளில் PNR நிலையை சரிபார்த்தல், ரயில் ரன்னிங் ஸ்டேட்டஸ் போன்ற தகவல்களை பெறவேண்டும். ஆனால் புதிய ரயில்வே சூப்பர் ஆப் மூலம், இந்த அனைத்து சேவைகளும் ஒரே செயலியில் கிடைக்கும். பயணிகள் விரல் நுனியில் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த முடியும்.

IRCTC தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவில் முதன்மையான செயலியாக உள்ளது. புதிய சூப்பர் செயலி அறிமுகமான பிறகு, IRCTC செயலிக்கு கடும் போட்டி ஏற்படும். இதனால் IRCTC செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க  உலகின் முதல் 50 dB நெக் ஸ்ட்ராப். CMF சத்தம் ரத்துசெய்யும் ஹெட்ஃபோன்கள். விலை தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *