
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் க்யூஆர் குறியீடு கட்டண முறை அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய முறை பயணச் சீட்டுகள் வாங்கும் செயல்முறையை துரிதமாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் இனி முன்பதிவு செய்யாத டிக்கெட்கள், நடைமேடை டிக்கெட்கள், மற்றும் முன்பதிவு டிக்கெட்களுக்கான கட்டணத்தை க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து யுபிஐ செயலிகளின் மூலம் செலுத்தலாம். இப்புதிய முறை ரயில் நிலையங்களில் பணம் கையாளுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்து, கட்டணம் செலுத்தும் நேரத்தை குறைத்து பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம், பயணச்சீட்டு மையங்களில் காத்திருப்பதற்கான காலம் குறைக்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாகவும் எளிதாகவும் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டுகளை பெற முடியும்.