விண்டோஸ் பாதிப்பு எதிரொலி : கோவையில் விமான சேவைகள் ரத்து !

1200px Air Carnival M IBAI at Dubai DXB Apr 2016 - விண்டோஸ் பாதிப்பு எதிரொலி : கோவையில் விமான சேவைகள் ரத்து !<br>

மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம் இன்று மதியம் திடீரென முடங்கியது. இதனால் விண்டோஸ் இயங்கு தளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். குறிப்பாக, விமான துறை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச் சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன.
விண்டோஸ் மென்பொருள் பாதிப்பு காரணமாக கோவை விமான நிலையத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.பெங்களூர், சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட 4  விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. டெல்லி, புனே செல்லும் விமானங்கள் தாமதம் என அறிவிக்கபட்டு உள்ளது.
விமானம் தாமதமானது குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்து உள்ளனர். அத்துடன், விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்டோஸ் பாதிப்பு காரணமாக விமான நிலையத்தில் பயணிகளுக்கு கையால் எழுதப்பட்டு உள்ள போர்டிங் பாஸ் ஒரு சில இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றது.கோவை மட்டுமின்றி உலகில் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதையும் படிக்க  திருச்சியில் சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *