ராமர் கோவிலில் வள்ளி ஒய்லி கும்மியாட்டம் அரங்கேற்றம்…

IMG 20240928 WA0023 - ராமர் கோவிலில் வள்ளி ஒய்லி கும்மியாட்டம் அரங்கேற்றம்...

பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரளா எல்லை பகுதியான மீனாட்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமர் பண்ணை ராமர் கோவிலில் இன்று புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையொட்டி தமிழகம் மற்றும் கேரளா பகுதி சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர்.

img 20240928 wa00205923089490134139309 - ராமர் கோவிலில் வள்ளி ஒய்லி கும்மியாட்டம் அரங்கேற்றம்...img 20240928 wa00253706419704286088089 - ராமர் கோவிலில் வள்ளி ஒய்லி கும்மியாட்டம் அரங்கேற்றம்...img 20240928 wa00245686396848916615159 - ராமர் கோவிலில் வள்ளி ஒய்லி கும்மியாட்டம் அரங்கேற்றம்...

அதை ஒட்டி பொள்ளாச்சி சுப்பேகவுண்டன் புதூர் மற்றும் நஞ்சே கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த பாரதி வள்ளி ஒய்லி கும்மியாட்ட கலைக்குழுவினரின் சார்பில் வள்ளி கும்மியாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது.

இதில் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமாட வள்ளி கும்மி ஆட்டம் ஆடி ஆசத்தினர்.,

வள்ளியின் பிறப்பு முதல் திருமணம் ஆவது குறித்து பாட்டு பாடி அதற்கேற்றால் போல் அசைந்து வள்ளி கும்மியாட்டும் ஆடிய நடனத்தைக் கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர்.,

மேலும் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய பாரதி வள்ளி ஒய்லி கும்மியாட்டத்தை தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மாநிலத்திலும் இந்த பாரம்பரிய கலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று இந்நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தெரிவித்து இன்று பாரதி வள்ளி ஒய்லி கும்மியாட்டத்தை அரங்கேற்றம் செய்தனர்.

இதையும் படிக்க  124 ஆண்டுகளில் 7-ஆவது முறையாக அதிக மழை பதிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *