Thursday, October 30

பள்ளி வாகன ஓட்டுநர் கைது!

புதுச்சேரியில் வேனில் சென்றுவந்த அரசு பள்ளி மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட வேன் ஓட்டுநரை போலீசார் போக்சோ வழக்கில், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை புதுச்சேரி மணவெளி தொகுதகுட்பட்ட தானாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் ஆறு வயது சிறுமியிடம் அதே பள்ளி ஆசிரியர் மணிகண்டன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு பள்ளி மாணவியிடம் வேன் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமையில் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி நையினார்மண்டபத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (25), வேன் ஓட்டுநரான இவர் தினமும் பள்ளி மாணவ, மாணவிகளை வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீடுக்கும் அழைத்து வரும் பணி செய்து வந்தார். இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் வேனில் பயணித்த அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே சுபாஷ் சந்திரபோஸ் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் வீட்டில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். பெற்றோர் மாணவியிடம் விசாரித்த நிலையில் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இச்சம்பவம் குறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கோரிமேடு காவல்நிலைய போலீசார் பாலியில் வன்கொடுமையில் ஈடுப்பட்ட வேன் ஓட்டுநரான, நயினார் மண்டபம் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஷ் (25) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

 
இதையும் படிக்க  "மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *