Thursday, July 31

“மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்”

திருச்சி:தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர் நலச்சங்கம், தலைவரான பாபநாசம் வேலு தலைமையில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில், தலைமை பொறியாளர்களை சந்தித்து, 13 மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

"மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்"

2023-ஆம் ஆண்டில் அமலாக்கத்துறையினரால், தமிழக முழுவதும் உள்ள அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டது. இதனால் அனைத்து அரசு மணல் குவாரிகளும் இன்று வரை மூடப்பட்டுள்ளன. இதனால், மணல் லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் வேலை இழந்துள்ளன, மேலும் அதன் விளைவாக மணல் லாரி உரிமையாளர்கள் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.

மணல் குவாரிகள் இயங்காததால், கட்டுமானத் தொழில்களுக்கு மணல் இன்றியமையாத தேவையாக இருந்தாலும், செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்கள் அதிக விலைக்கு மணலை விற்று பொதுமக்களையும் அரசு அலுவலகங்களையும் ஏமாற்றி வருகின்றன. இது கட்டுமான தரத்திற்கு பாதிப்பை உண்டாக்குகிறது.

அந்த வகையில், மணல் லாரி உரிமையாளர்கள் கடனை செலுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். தற்போது அவர்கள் வாழ்வாதாரம் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால், தமிழக அரசிடம், 13 மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக்கோரி கேட்டுள்ளனர்.

இதையும் படிக்க  திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொங்கல் விழா
"மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்"

அதன் பின், தமிழக அரசு இவ்வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில், அனைத்து மணல் லாரி உரிமையாளர்களை ஒன்றிணைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கனிம வளங்களில் முறைகேடு நடைபெறுவதாக கூறியதை கண்டித்து, அதிமுக ஆட்சியின்போது ஏற்கனவே ஏகபோகமான முறைகேடுகள் நடந்ததாக தாங்கள் பதிலளித்தனர்.

மற்றும், மணல் லாரி உரிமையாளர்களுக்கு எதிரான முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுக்காததால், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக அரசு மாற்றத்தை எதிர்கொள்வதாக எச்சரித்தனர்.

"மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்"
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *