Thursday, July 31

ராஜ்நகர் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா

திருச்சி மாவட்டம் திருவெறும்பூருக்கு அருகிலுள்ள “ஒருங்கிணைந்த அம்மன் நகர் கிழக்கு – ராஜ்நகர் நலச்சங்கத்தின்” இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா, பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இணக்கத்தையும், நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் பலவகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கண்களை மூடி பானை உடைத்தல், இசை நாற்காலி, பலூன் உடைத்தல், ஓட்டப் பந்தயம், கோலப்போட்டி, சமையல் போட்டி, சைக்கிள் பந்தயம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ராஜ்நகர் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா

ஞாயிறு மாலை, குழந்தைகள் மற்றும் மாணவர்களால் நடனம், பாடல், மேடைப் பேச்சு, ஓவியம் வரைதல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இதில் அவர்களின் திறமைகள் வெளிப்பட்டன.

இந்த விழாவை திரு S. மனோஜ்குமார் சிறப்பாக ஒருங்கிணைத்து நெறியாள்கை செய்தார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை நலச்சங்கத்தின் நிர்வாகிகளான திரு V. ஏழுமலை, திரு SRP. வெங்கடசாமி, திரு பவித்திரன் மற்றும் திரு பாஸ்கர் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இரவு நிகழ்ச்சிகள் முடிந்தபின், அனைவரும் ஒன்றாக அமர்ந்து சுவையான விருந்து பரிமாறப்பட்டது.

இதையும் படிக்க  பொங்கல் தொகுப்பு வழங்கிய மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்
ராஜ்நகர் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *