Thursday, October 30

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய போராட்டம்

திருச்சியில் இன்று தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச் சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய கோரி மாபெரும் உரிமை கேட்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம், திருச்சி மாவட்ட ராக்சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபர் அசோசியேஷன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய போராட்டம்
புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய போராட்டம்

தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில பொருளாளர் சேகர், மாநில துணைத் தலைவர் அழகு, மாநில துணைப் பொருளாளர் டேவிட், மாநில முதன்மை செயலாளர் தமிழரசன், மாநில இணைச்செயலாளர் ஷாஜகான், மாநில பொதுச் செயலாளர் ஜமால் முகமது மற்றும் பல முன்னணி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய போராட்டம்

இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்து பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,ஆர்டிஓ அலுவலகங்களில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்,வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்,வாகன பெயர் மாற்றம் செய்யும்போது ஓடிபி முறையை தவிர்த்து பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்,டிடி கேஸ் அபராத தொகையை முதல் உரிமையாளர் மட்டுமே செலுத்த முடியும் என்ற விதியை மாற்ற வேண்டும்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலிருந்த ஆலோசகர்கள், துணைத்தலைவர்கள், செயலாளர்கள், கிளை சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  10 லட்சம் பணம் கேட்டு வெளிநாட்டிற்கு சென்ற கணவன்...
புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய போராட்டம்
புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய போராட்டம்
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *